ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட காசுக்காக யாழில் வாள்வெட்டு: ரிக்ரொக்கில் வீடியோ பதிவிட்ட கூலிப்படைக்கு விளக்கமறியல்!

Date:

நெல்லியடி, அத்தாய் பகுதியில் ஒருவரை வாள், கோடாரி, கொட்டன்களால் தாக்கி வீடியோ எடுத்து, ரிக்ரொக்கில் பதிவிட்ட 9 பேரும், விளககமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் ந.ரஜீவன் இன்று (13) உத்தரவிட்டார்.

கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த 8 பேர், நேற்று காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். நெல்லியடி பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்தாய் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே தாக்கப்பட்டார்.

அந்த பகுதியில் வன்முறை குழுக்கள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன. முன்பகையை காரணமாக சொல்கிறார்கள்.

இந்த சம்பவமும் முன்பகை அடிப்படையிலேயே நடந்துள்ளது.

நபர் ஒருவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு லிசாரணையில் முன்னிலையாக சென்ற போதே, வன்முறை கும்பல் அவரை வழிமறித்து தாக்குதல் நடந்தியது.

அவரை அடித்து விழுத்தி, கத்தி மற்றும் கோடாரியால் வெட்டியதுடன், கொட்டனால் அடித்துமுள்ளனர். இதை ஒருவர் வீடியோ எடுத்தார்.

காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் பற்றி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தாக்குதலாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் 8 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லியடி பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைதான 6 பேர் அத்தாய் பகுதியை சேர்ந்தவர்கள். 3 பேர் இராஜகிராமத்தை சேர்ந்தவர்கள். 18- 25 வயதுக்குட்பட்டவர்கள்.

தாக்கப்பட்டவருக்கும், ஜேர்மனியில் உள்ள ஒருவருக்குமிடையில் முன்பகை உள்ளதாகவும், ஜேர்மனி நபர் அனுப்பிய பணத்துக்காக தாக்குதல் நடத்தியதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

கைதான ஒருவரின் கையடக்க தொலைபேசியில், தாக்குதல் சம்பவம் பற்றிய வீடியோ காணப்பட்டது. அதை ரிக்ரொக்கிலும் பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...

பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணியிடைநீக்கம்

வத்துப்பிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் சாவடியில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர்,...

கொழும்பில் கடத்திக்கொல்லப்பட்ட சீனர் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்

கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்