25 வயது மனைவிக்கு இன்சுலின் ஏற்றிக் கொல்ல முயன்ற மட்டக்களப்பு வைத்தியர்: இதுவரை வெளியாகாத பல தகவல்கள்!

Date:

பம்பலப்பிட்டி லயர்ட்ஸ் வீதியில் வசிக்கும் திருகோணமலை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரான ஆதம் பாவா மொஹமட் ஷிஃபான் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி தனது மனைவி ருசைக்கா ஃபாஹிஸை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைக்கும் இன்சுலின் ஊசி செலுத்தியதால்,  மனைவி கோமா நிலையில் உள்ளார். தற்போதும், களுபோவில வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

வைத்தியர் ஷிஃபான் தனது மனைவியை திட்டமிட்டு கொல்ல முயற்சித்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

திருமணமாகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் தானும் மனைவியும் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது வைத்தியர் ஷிஃபான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்ய இருவரும் திட்டமிட்டதாகவும், தனது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படும் இன்சுலின் ஊசியை செலுத்தியதாகவும் கூறுகிறார்.

ஆனாலும், இருவரும் திட்டமிட்டு தற்கொலை மயற்சியை ஆரம்பித்து, மனைவிக்கு இன்சுலின் ஊசி செலுத்தினாலும், இருவரின் ஒப்பந்தப்படி வைத்தியர் தனக்கு இன்சுலின் ஊசி செலுத்தவில்லை.

மரணத்துக்கு அஞ்சி தான் இன்சுலின் ஊசி போடவில்லை என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இது உண்மையா இல்லையா என்பது இன்னும் விசாரணையில் உள்ளது. கோமா நிலையில் இருக்கும் ருசைக்கா ஃபாஹிஸ் வாய் திறக்கும் வரை இந்தப் படுகொலை முயற்சியில் மர்மங்கள் நீடிக்கலாம்.

வைத்தியர் ஷிஃபானுக்கு 33 வயது. மனைவி ருசைக்கா ஃபாஹிஸூக்கு 25 வயது. இவர்கள் இருவரின் சொந்த பிரதேசம் காத்தான்குடி.

ருசைக்கா ஃபாஹிஸ் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை காத்தான்குடியில் வசிக்கும் பணக்கார வர்த்தகர். பால் மாவு நிறுவனமொன்றின் முகவராகவும் உள்ள இவர் காத்தான்குடியில் பல வியாபாரங்களை நடத்தி வருகின்றார்.

அந்த குடும்பத்தில் ருசைக்கா ஃபாஹிஸூக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் ஒரு தம்பி மற்றும் சகோதரி உள்ளனர். மூத்த சகோதரி திருமணமாகி தனது கணவருடன் வெள்ளவத்தையில் வசித்து வருகிறார்.

ஃபாஹிஸின் குடும்ப நிலையை ஒப்பிடும்போது வைத்தியர் ஷிஃபானின் குடும்பம் பணக்காரர்கள் இல்லை. ஆனால் அவர்கள் காத்தான்குடியில் கவனிக்கத்தக்க குடும்பம். ஷிபானின் தந்தை புறக்கோட்டையில் மொத்த விற்பனைக் கடை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. தந்தை இப்போது உயிருடன் இல்லை. மாரடைப்பால் அவர் அகால மரணம் அடைந்து விட்டார்.

ஷிபானின் குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் மட்டுமே உள்ளனர். இருவரும் ஷிஃபானை விட இளையவர்கள். அவர்களில் மூத்த சகோதரர் கனடாவில் இருக்கிறார். இளையவர் மாணவன்.

ருசைக்கா ஃபாஹிஸ் மற்றும் ஷிஃபான் இடையே சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷிஃபான் தற்போது மருத்துவராக பயிற்சி பெற்று வருகிறார். திருமணமான ஒரு வருடத்திற்குப் பிறகு ஷிஃபான் ஒரு தொழில்முறை மருத்துவராக பணியில் சேர்ந்தார். இவர் திருகோணமலை வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.

திருமணத்தின் பின்னர், ஷிஃபான் தனது மனைவி பாஹிஸுடன் பம்பலப்பிட்டி, லயர்ட்ஸ் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்தார். அந்த வீடு  ஃபாஹிஸின் தந்தையால் தம்பதியருக்கு வாங்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து தினமும் வீட்டுக்கு வர முடியாத காரணத்தினால் ஷிஃபான் திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஃபாஹிஸ் தனது சகோதரர் ருஷெய்ன் மற்றும் சகோதரி ருஷெய்மாவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மகளின் நலம் விசாரிப்பதற்காக வாரத்தில் ஓரிரு முறை கொழும்பு சென்று வந்தார்.

கணவர் தொலைவில் இருந்தாலும் ஃபாஹிஸ் அவருடன்அடிக்கடி தொலைபேசியில் பேசினார்.

தமக்கு குழந்தை இல்லையென்பது ஃபாஹிஸின் மிகப்பெரிய குறை. மகப்பேறு மருத்துவ நிபுணராக இருந்த ஷிஃபான், அதற்கான காரணத்தை அறிந்திருந்தார், ஆனால் இதுவரை அதற்கான தீர்வை கண்டறியவில்லையென உறவினர்கள் சொல்கிறார்கள்.  ஒரு வேளை அதையெல்லாம் செய்துவிட்டு அது தோல்வியடைந்ததால் தான் இவ்வாஙான விபரீத முடிவை எடுத்தார்களா என்பது இருவருக்குமே தெரியும். அது அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்றாலும், குழந்தை இல்லாத பிரச்சனை, இன்சுலின் ஊசி போட்டு மனைவியைக் கொல்ல முயற்சிப்பது வரை செல்கிறது.

பட்டதாரியான ஃபாஹிஸ், கவலைகளை மறப்பதற்காக முதுகலை கூட படிக்க ஆரம்பித்தார். ஆனாலும், குழந்தையின்மை கவலை அவரை விடவில்லை.

இரவு நேரங்களில் மனைவி தொலைபேசியில் அழைக்கும் சமயங்களில் ஷிஃபான் சில நேரங்களில்  நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருப்பார். கணவனுடன் அன்பாகப் பேச முடியாததும் அவருக்கு மிகுந்த அழுத்தத்தையும் தந்தது.

தற்கொலை செய்ய நினைப்பதாக கூறி அழுத்தத்தை வெளிப்படுத்தியதாக ஷிஃபான் தற்போது கூறுகிறார். மனைவி அப்படி சொன்னாரா இல்லையா என்பதை, மனைவி சுயநினைவடைந்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

இந்த சர்ச்சை பின்னணியில், வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய ஷிஃபான், சில நாட்கள் மனைவியுடன் தங்கியிருந்தார்.

ஏப்ரல் 24 ஆம் திகதி காலை சுமார் 8.00 மணி.

மனைவியின் சகோதரன் ருஷேயன் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு ஷிஃபான் திடீரென வந்து,

“அக்கா சுயநினைவில்லாமல் இருக்கிறார்“ என பதற்றத்துடன் சொன்னார்.

ருஷேயன் படுக்கையில் இருந்து குதித்து அக்கா படுத்திருந்த அறைக்கு ஓடினார். அந்த நேரத்தில் அக்கா இரவு உடையில் சோபாவில் படுத்திருக்கிறார். பலமுறை அக்காவின் பெயரை அழைத்தாலும் எந்த அசைவும் இல்லை. முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து, முகத்தில் தட்டினார், ஆனால்  அதற்கு எதிர்வினையாற்றவில்லை.

அந்த சமயத்தில், வைத்தியரான கணவர் பொறுப்பற்றவராகவும், மனைவிக்கு என்ன நேர்ந்தது என்பதைச் சரிபார்ப்பதில் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் கூட அக்கறை காட்டாமலிருந்ததையும், ருஷேயன் கவனித்தார்.

அக்காவின் கணவர் பொறுப்பற்ற நபராக அங்கு இருந்தபோது, ​​ருஷேயன் தனது கைத்தொலைபேசியை எடுத்து வெள்ளவத்தையில் உள்ள தனது மூத்த சகோதரிக்கு அழைப்பு விடுத்தார்.

அழைப்பைப் பெற்ற சிறிது நேரத்திலேயே, மூத்த அக்கா, தனது கணவனுடன் அந்த வீட்டிற்கு வந்தார். ஃபாஹிஸை களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்து, ஷிஃபானையும் அழைத்துக் கொண்டு காரில் சென்றனர்.

களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட, ஃபாஹிஸை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் கோமா நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அவதானித்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவர் இன்று வரையும் கோமா நிலையிலேயே இருக்கிறார்.

ஃபாஹிஸ் எப்படி கோமா நிலைக்கு வந்தார் என்பதை கண்டறிவது களுபோவில வைத்தியசாலை  வைத்தியர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. அதன்படி, அவர் பல்வேறு சோதனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்.

அந்த சோதனைகளில் ஒன்றில், அவரது உடலில் பொட்டாசியம் அசாதாரணமாக அதிகரித்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இரத்தத்தில் அதிக சீனி அளவு கொண்ட நோயாளிகளுக்கு சீனியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட இன்சுலின் மூலம் பொட்டாசியம் அதிகரிக்கிறது என்பதை கண்டறிய மருத்துவர்களுக் சிரமம் இருக்கவில்லை.

ஆனால் ஃபாஹிஸ் இரத்தத்தில் அதிக சீனி அளவு கொண்ட நிலையில் அவதிப்பட்டவரும் அல்ல என்பதால், அதில் ஒரு தீவிரமான பிரச்சனை இருக்கிறது.

அப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஃபாஹிஸை பரிசோதிக்க வந்த சிறப்பு வைத்தியரே, இந்த மர்மத்தை அவிழ்க்கும் முதலாவது முடிச்சை கண்டறிந்தார். ஃபாஹிஸின்  முழங்கைக்கு அருகில் வலது கையின் உட்புறத்தில் ஊசி செலுத்தப்பட்ட அடையாளத்தை வைத்தியர் கவனித்தார்.

ஃபாஹிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, ஊசி செலுத்தப்பட்ட அடையாளம் குறித்து வைத்தியர்கள் ஷிஃபானிடம் விசாரித்ததை ​​ருஷேயன் கவனித்தார்.

நள்ளிரவு 2:00 மணியளவில் தூங்கச் சென்றபோது மனைவி நலமாக இருந்ததாக ஷிஃபான் வைத்தியர்களிடம் கூறினார்.

மனைவியின் நடத்தையில் எந்த மாற்றத்தையும் கூட அவன் கவனிக்கவில்லை என்று கூறினார்.

காலை 8.00 மணிக்கு எழுந்த போது, மனைவியை கோமா நிலையில் பார்த்ததாக ஷிஃபான் கூறினார்.

அதைத் தவிர ஷிபானின் வாயிலிருந்து வேறு எதுவும் வரவில்லை. வைத்தியர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியிலும் அவர் நழுவினார். சில கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மனைவிக்கு நேர்ந்த கதியினால் அதிர்ந்து போனவர் போல நடித்தார்.

ஷிஃபானின் நடத்தை மற்றும் அவர் என்ன சொல்கிறார் என்பiத கவனித்த மனைவியின் சகோதரன் ருஷேயனுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. அதனால் லையர்ட்ஸ் சாலையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த தங்கையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அக்காவின் படுக்கையறையை சரிபார்க்க அறிவுறுத்தினார்.

அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில், சகோதரிஅறை முழுவதும் தேடினார். ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.

இறுதியாக, அவரது சகோதரரால் அலமாரியை சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.
அப்போதுதான் அலமாரியில் ஒரு ஊசியை  கண்டார்.

அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் இருந்து வரும் வழியில் ஷிஃபான் எடுத்துச் வந்த கருப்புப் பையில் மற்றொரு ஊசி கண்டெடுக்கப்பட்டது. பாதி பயன்படுத்தப்பட்ட இன்சுலின் குப்பியும் காணப்பட்டது. பையில் உள்ள துணிகளுக்கு இடையே ஊசி  மற்றும் இன்சுலின் போத்தல் ஆகியவையும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கவனமாக வைத்திருக்குமாறு களுபோவில வைத்தியசாலையில் இருந்து  ருஷேயன் கூறினார்.

காத்தான்குடியிலிருந்து தந்தை வீட்டிற்கு வந்தவுடனேயே அனைத்தையும் அவரிடம் கொடுத்து, அக்காவின் விவகாரத்தில் சந்தேகமிருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், களுபோவில வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வந்து, வீட்டின் பாதுகாப்பு கமெரா அமைப்பைச் சரிபார்த்துள்ளார்.

24ம் திகதி காலை 8:00 மணிக்கு தான் எழுந்ததாக ஷிஃபான் வைத்தியர்களிடம் கூறினாலும், அன்று காலை சுமார் 6:30 மணியளவில் அவர் அறையை விட்டு வெளியே வந்தது கமராவில் பதிவாகியுள்ளது.

ஷிஃபான் காலை 6.40 மணியளவில் படுக்கையறையிலிருந்து வெளியே வந்து குப்பைத் தொட்டியில் எதையோ வீசியது தெளிவாகப் பதிவாகி இருந்தது.

ஃபாஹிஸின் தந்தை ஏப்ரல் 29 ஆம் திகதி ஷிஃபானை சந்தித்து இது பற்றி கேட்டார்.

“என் மகளுக்கு என்ன நடந்தது, அவளுக்கு எப்படி உடம்பு சரியில்லாமல் போனது என்று இவ்வளவு நாளாய் நான் கேட்கவில்லை. ஆனால் இன்று நான் கேட்க வேண்டும். நீங்கள் எங்களிடம் எதையோ மறைக்கிறீர்கள் என்று தோன்றியதே இதற்குக் காரணம்” என்று கேட்டார்.

எனினும், ஷிஃபான் அதுபற்றி வாய் திறக்கவில்லை. “எனக்கு எதுவும் தெரியாது” என்று அமைதியாக இருந்தார்.

“நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எங்களிடம் உண்மையைச் சொல்லவில்லையென்றால், நீங்கள் சிக்கலில் இருப்பீர்கள். இறுதியில், உங்களுக்கு உதவி செய்ய ஒருவர் கூட இல்லாமல் இருக்கலாம்,” என்று தந்தை சில எச்சரிக்கையுடன் கூறினார்.

“இன்சுலின் கொடுத்தேன்” என்று கண்ணீருடன் ஷிஃபான் சொன்னார்.

“நாங்கள் இருவரும் இறக்க முடிவு செய்தோம். குழந்தை இல்லாத பிரச்சனையால்.” ஷிஃபான் எல்லாவற்றையும் ஃபாஹிஸின் விருப்பப்படியே செய்ததாக கூறினார்.

குழந்தை இல்லாததால் ஏற்படும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். ஷிஃபான் இன்சுலின் ஊசி போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். ஃபாஹிஸினும் ஒப்புக்கொண்டதாக கூறுகிறார். அதன் பிரகாரம், பம்பலப்பிட்டியில் உள்ள மூலிகைக் கடையொன்றில், இன்சுலின் மற்றும் ஊசிகளை முதல் நாளில் கொள்வனவு செய்கிறார். காலையில் இன்சுலின் செலுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.

மனைவிக்கு இரத்த சீனி தொடர்பான எந்த மருத்துவ நிலையும் இல்லை, தடுப்பூசியை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே கோமா நிலைக்கு சென்றார்.

“மனைவிக்கு முதலில் இன்சுலின் செலுத்தி விட்டு, அடுத்ததாக எனக்கு நானே செலுத்துவதாக பேசிக் கொண்டோம். ஆனால் நான் இன்சுலின் ஊசி போட பயந்தேன். அதனால்தான் நான் எனக்கு செலுத்தவில்லை.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையெல்லாம் கேட்ட ஃபாஹிஸின் தந்தை அன்றிரவு இவை அனைத்தையும் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்தார். அவர் தனது மருமகன் மீது புகார் அளித்து, ஊசி மற்றும் இன்சுலின் குப்பிகளை போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து, பொலிசாரால் ஷிஃபான் கைதானார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் தன்னாமுனை யில் ஒரு வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழப்பு-

20 லீற்றர் கொண்ட தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது ஆண்...

மீண்டும் தயாராகும் ஹிஸ்புல்லா

ஈரானிடமிருந்து பண உதவியைப் பெற்ற பிறகு, லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா,...

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்