பத்திரன டெஸ்ட் போட்டியின் அருகில்கூட செல்லக் கூடாது: தோனி அறிவுரை

Date:

மதிஷ பத்திரன டெஸ்ட் கிரிக்கெட் அருகில் கூட செல்லக் கூடாது என்று என்னளவில் நினைக்கிறேன் என்று சிஎஸ்கே கப்டன் தோனி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் மோதின.

இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற சிஎஸ்கே கப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இதன்மூலம், மும்பை அணிக்கு எதிராக 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த நிலையில் போட்டி முடிந்து பேசிய சிஎஸ்கே கப்டன் தோனி கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய பத்திரனவை பாராட்டினார்.

அதுகுறித்து அவர் பேசும்போது, ”பத்திரன சிறப்பாக பந்து வீசினார். என்னளவில் பத்திரன அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் அருகில் கூட வர வேண்டாம் . வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கூட (ஒரு நாள் கிரிக்கெட்) அவர் குறைவாக விளையாடலாம். அதே வேளையில் நல்ல உடற்தகுதியுடன் அவர் ஐசிசி போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்.” என்று தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு பல்கலைக்கழகத்தில் 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் 2 சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்கள் பூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு–

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 3 சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக...

உயிருக்குப் போராடிய காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சம்மாந்துறை சேகப்பற்று வயல் நிலத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானைக்கு...

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்