பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் வாகனமும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின.
செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்துக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், டிஃபெண்டர் வாகனத்தின் சாரதியாக இருந்த ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தெவலேகம பிரதேசத்தில் வசிப்பவர்.
விபத்தில் சிக்கிய சிறிய ரக லொறியின் சாரதியும், லொறியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கெட்டபத்வெஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் பயணித்த வாகனம் வாரியபொலவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்துள்ளது. சிறிய லொறி வலப்புறம் திரும்பியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.