ஒடிசா மாநிலம், பௌத் மாவட்டம், சத்ராங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர் பெஹெரா. இவருக்குச் சமீபத்தில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மணமகன் ஊர்வலத்துக்குச் சொகுசு கார் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மணமகன் அதை வேண்டாம் என மறுத்திருக்கிறார்.
மேலும், ஒரு ஜேசிபி வாகனத்தை அலங்கரித்து, அதில் நாயகர் மாவட்டத்திலுள்ள கந்தபடா பகுதியிலிருந்து கியாஜாரா கிராமத்துக்கு ஊர்வலமாக வந்திருக்கிறார். மணமகன் கங்காதர், ஜேசிபி வாகனத்தில் திருமணம் ஊர்வலத்தை நடத்தியது அந்த வட்டாரம் முழுவதும் பேசுபொருளானது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரலானது.
அதைத் தொடர்ந்து, இந்த ஊர்வலத்துக்குச் சொகுசு வாகனத்தைப் பயன்படுத்தாமல் ஜேசிபி-யைப் பயன்படுத்தியது குறித்து மணமகனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்தவர், “என்னுடைய சகோதரன் ஜேசிபி வாகனம் மூலம் பொருளீட்டுகிறான். அவனின் இந்தத் தொழில் குறித்து சில அசௌகரிய சிந்தனைகள் உறவினர்களுக்கு மத்தியிலிருந்தன. அவற்றைப் போக்கவும், என்னுடைய சகோதரனுக்கு மரியாதை செய்யவும் ஜேசிபி-யில் ஊர்வலம் செல்வது என முடிவெடுத்தேன்.
நான் நினைத்தது போலவே அனைத்தும் நடந்தேறியிருக்கிறது” என்றார்.
கங்காதரின் இந்தச் செயல் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மற்றொரு சந்தர்ப்பத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஒரு மணமகன் தனது திருமண இடத்திற்கு ஜேசிபியில் சவாரி செய்ததாக கூறப்படுகிறது. அவர் மணமகள் வீட்டிற்குச் செல்லும் போது கடும் பனிப்பொழிவு இடையூறு ஏற்படுத்தியதால் ஊர்வலம் கடினமாகிவிட்டது.
#VideoViral Adventures wedding in #Hunza Valley #Pakistan pic.twitter.com/ruhMmqwPYI
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) October 1, 2021
மற்றொரு சந்தர்ப்பத்தில், கடந்த ஆண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண நாளில் ஆடம்பரமான கார் சவாரி செய்து விட்டு, ஜேசிபியில் அந்த இடத்தை அடையத் தேர்வு செய்தனர். அந்த வீடியோ வைரலானது.




