குறட்டை பிரச்சினையை மையப்படுத்திய ‘குட் நைட்’: கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்!

Date:

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ பட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘காலா’, ‘ஜெய்பீம்’ படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த மணிகண்டன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தூங்கும்போது குறட்டைவிடும் பழக்கம் கொண்ட நாயகன் தன் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இந்த கதைக்களத்தை ஜாலியான ஃபேமிலி ட்ராமாவாக இயக்குநர் கொடுக்க முயன்றிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும், குறட்டையை நிறுத்த நாயகன் செய்யும் செயல்களும், காதல் வாழ்க்கைக்கு குறட்டை பெரும் பிரச்சினையாக இருப்பதையும் காமெடியாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

‘குறட்டையும் பிரச்சினைகளும்’ என்ற சிறிய ஒன்லைனைக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம், அது சார்ந்து பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பையும் பதிவு செய்திருப்பது கவனம் பெறுகிறது.

ஷான் ரோல்டனின் பின்னணி குரலும் இசையும் ட்ரெய்லரை ரசிக்க வைக்கிறது. படம் வரும் மே 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...

இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய...

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்