2023ஆம் ஆண்டுக்கான உலக வருடாந்த மகிழ்ச்சி அறிக்கையில், உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை 112 வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் 127வது இடத்தில் இருந்தது.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் குறைந்த ஊழல் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் தெரிவு செய்யப்படுகிறது.
பின்லாந்து தொடர்ந்து 6வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்படும் திங்கள்கிழமை (மார்ச் 20) இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் இந்தியா 125வது இடத்தில் உள்ளது.
உலக மகிழ்ச்சி அறிக்கை என்பது UN Sustainable Development Solutions Network இன் வெளியீடாகும். 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடம் இருந்து உலகளாவிய கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.
கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டு பட்டியலில் நோர்டிக் நாடுகள் பல முதல் இடங்களில் உள்ளன. டென்மார்க் 2வது இடத்திலும், ஐஸ்லாந்து 3வது இடத்திலும் உள்ளது.
“நோர்டிக் நாடுகள் பொதுவாக உயர்ந்த தனிநபர் மற்றும் நிறுவன நம்பிக்கையின் அடிப்படையில் முன்னணியில் உள்ளன. COVID-19 இறப்பு விகிதங்கள் மேற்கு ஐரோப்பாவில் மற்ற இடங்களை விட மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இருந்தன” என்று அறிக்கையின் ஆசிரியர்கள் ஆவணத்தில் தெரிவித்தனர்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா இந்தப்பட்டியலில் இலங்கை, நேபாளம், சீனா, பங்களாதேஷூக்கு கீழே, அறிக்கையில் 126வது இடத்தில் உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் இரு நாடுகளின் தரவரிசையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யா 72வது இடத்திலும், உக்ரைன் 92வது இடத்திலும் உள்ளது.




