இலங்கை தமிழ் அரசுகட்சியின் யாழ், திருமலை உள்ளூராட்சி வேட்பாளர் தெரிவில் திருப்தியின்மை: உடனடியாக அறிக்கை கோரினார் இரா.சம்பந்தன்!

Date:

உள்ளூராட்சிசபைக்கான இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்ட வேட்பாளர் தெரிவில் பல்வேறு குழறுபடிகள் நிகழ்ந்துள்ளதால், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமிக்கப்படவுள்ளது.

திருகோணமலை மாவட்ட தெரிவில் தனக்கு திருப்தியின்மை, உடன்பாடின்மையுள்ளதால் முறையான குழுவொன்றை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

இதேபோல, யாழ் மாவட்ட தெரிவிலும் தனக்கு திருப்தியின்மை உள்ளதால் அது குறித்தும் ஆராந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் இந்த அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.

இரா.சம்பந்தன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதனை தெரிவித்ததாக, மாவை சேனாதிராசா இன்று மத்தியகுழுவிற்கு அறிவித்தார்.

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி வேட்பாளர் தெரிவு, கனடாவிலிருந்து வந்துள்ள குகதாசன்- எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாகவும், இரா.சம்பந்தனின் சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டதாகவும், இதானால் சம்பந்தன் கடுமையான அதிருப்தியடைந்திருந்ததாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்