கிரீஸில் நடைபெறும் உலக சதுரங்க போட்டிக்கு யாழிலிருந்து தெரிவான 6 மாணவர்கள்!

Date:

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கனைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டி கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இலங்கை சார்பாக விளையாட தகுதியுடைய வீர, வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தேசிய மட்டப் போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன.

இப் போட்டியில் வெற்றிகளைப் பெற்ற யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சிவஞானவேல் நர்த்தவி 15 வயது பெண்கள் பிரிவிலும் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்று கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள சதுரங்கப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இப் போட்டிகளில் யாழ்.மாவட்டத்தில் இருந்து 13 வயது பெண்கள் பிரிவில் உ.வைஷாலி மூன்றாம் இடத்தினைப் பெற்றும், அ.ஆருத்ரன் 17 வயது ஆண்கள் பிரிவில் நான்காம் இடத்தினைப் பெற்றும், பி.ஜனுக்சன் 13 வயது ஆண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப் பெற்றும், பி.பிரதிக்சா 9 வயது பெண்கள் பிரிவில் ஆறாம் இடத்தினைப் பெற்றும் இலங்கை அணி சார்பாக கிரீஸ் நாட்டில் நடக்கவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்