எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சியான தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையிலுள்ள வீட்டில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்று உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டார். உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானளவில் அதிகரித்ததால் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.

தொடர்ந்தும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்