யாழ் மாவட்டத்தில் உள்ள பல பொதுக்கிணறுகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதை, தொடர்புடைய ஆதாரங்கள் மூலம் தமிழ்பக்கம் அறிந்தது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ் மாவட்டத்திலுள்ள பொதுக்கிணறுகளின் மாதிரிகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈகோலிக் எனப்படும் மலக்கழிவுகள் கிணறுகளில் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
கோயில், நூலகம், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கிணறுகளின் மாதிரிகளே ஆராயப்பட்டன.
குடிநீரில் ஈகோலிக் பரவுவது வாந்திபேதி உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1