குடிவரவு சட்டங்களை மீறி கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் வழக்கு தொடர்பில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களின் பிரதிகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திரு.பிரசன்ன அல்விஸ் இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தலையிடுமாறு சட்டமா அதிபருக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்படும் என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1