பெண்கள் ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது.
‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நியூசிலாந்து அணி இலங்கை அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக அமேலா கெர் 66 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இலங்கை திணறியதுடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.
இறுதியில் இலங்கை அணி 15.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. சாமரி அத்தபத்து அதிகபட்சமாக 19 ஓட்டங்களை பெற்றார்.
நியூசிலாந்து தரப்பில் அமேலா கெர், லியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.



