2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப்புக்கு போட்டியாக களமிறங்கிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே

Date:

2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் குடியரசுக் கட்சித் தலைவரான இவருக்கும், கட்சியின் சக தலைவரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். குடியரசுக் கட்சியை சார்பில் போட்டியிட ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இப்போது அதே கட்சியைச் சேர்ந்தவரும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலேவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிரதான கட்சிகள் என்றால் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள்தான். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக உள்ளார். அடுத்த ஆண்டு அவரின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும்.

இருக்கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட தங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டி என அறிவித்துள்ள நிலையில் இப்போது நிக்கியும் களத்தில் குதித்துள்ளார். இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வீடியோ ஒன்றை வெளியிட்ட நிக்கி, “நான் நிக்கி ஹேலே. நான் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன். நாட்டின் நிதிப் பொறுப்பை மீட்டெடுக்கவும், நமது எல்லையைப் பாதுகாக்கவும், நமது நாட்டை, நமது பெருமை மற்றும் நமது நோக்கத்தை வலுப்படுத்தவும் புதிய தலைமுறை தலைமை தேவைப்படும் நேரம் இது” என்று பேசியுள்ளார்.

51 வயதாகும் நிக்கி ஹேலே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரின் தந்தை அஜித் சிங் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். முதலில் கனடாவில் குடியேறிய அஜித் சிங் அதன்பின் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதே தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தனது 39 வயதில் பதவியேற்று அமெரிக்காவின் இளம் ஆளுநர் என்ற சாதனையை கடந்த 2011இல் படைத்தார் நிக்கி ஹேலே. இரு முறை இம்மாகாண சிறப்பாக செயல்பட்ட நிக்கி, ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது 2017 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரை ஐநா சபைக்கான அமெரிக்க பிரதிநிதியாகப் பணியாற்றியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்