நீதித்துறையில் புதிய நியமனங்கள்!

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் கே.பி பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதியரசர் கே.பி பெர்னாண்டோ கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அரச தலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எல்.டி.பி தெஹிதெனிய ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவை, நீதியரசர் கே.பி.பெர்னாண்டோவை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் செய்வதற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்படி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கே.பி.பெர்னாண்டோவுக்கு பதிலாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா...

கோப்பாய் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு...

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்