தமிழக தேர்தலில் யாரும் எதிர்பாராத திருப்பம்.. தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு… த.வெ.க முன்னிலையில்!

Date:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர், துணை முதல்வர் உட்பட திமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

அதேபோல திமுக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சேகர்பாபு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், த.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இந்த தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என பல்வேஉ கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், ஆளும் கட்சிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் விஜய்யின் தவெக பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 98 தொகுதிகளிலும், அதிமுக 64 தொகுதிகளில், திமுக 51 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்