யாழில் மின்சார கட்டணம் நிலுவையில் உள்ள பாவனையாளர் மீது நடவடிக்கை

Date:

யாழ்.மாவட்ட மின்சார பாவனையாளர்கள் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.தலைமை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

துண்டிக்கப்படும் சந்தர்ப்பத்தில் 3250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டும் நிலுவை செலுத்தப்படாத பாவணையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின்சார கட்டணம் செலுத்தாது நிலுவை உள்ள பாவணையாளர்கள் உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...

மட்டக்களப்பில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், ரூ.17 இலட்சம் பணத்துடன் மாயமான அடகு நிறுவன முகாமையாளர்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும்...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டிய இளைஞன் கைது!

அம்பாறை திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்