அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை உயர்த்தும் யோசனையை நடைமுறைப்படுத்த முடியாது எனவும், அது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற தீர்மானித்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (24) தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அப்பால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் இந்தக் குழு பெற்றுக்கொள்ளும் என்றும் மின்சாரக் கட்டணத்தை தற்காலிகமாக அதிகரிக்க சட்ட ஏற்பாடுகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1