கைக்குண்டை காட்டி மிரட்டல் விடுத்து, 62 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்திய 36 வயதான நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவரிற்கு எதிராக ஏற்கெனவே இரண்டு பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளிலும் 60, 62 வயதான பெண்களையே மிரட்டி வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார்.
கம்பஹா தம்மித பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய பெண்ணொருவருக்கே கைக்குண்டை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்து கொடூரமான முறையில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கந்தளாய் பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். கஞ்சாவிற்கு அதிக அடிமையான இந்த நபர், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியாவார்.
60 மற்றும் 62 வயதுடைய இரு பெண்களை பலாத்காரம் செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக கந்தளாய் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




