இன்றைய வானிலை

Date:

நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத் தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்…

யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும்.
மன்னார் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும்.
மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்.
கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை.
கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
அனுராதபுரம் – அடிக்கடி மழை பெய்யும்.
காலி – பிரதானமாக சீரான வானிலை.

spot_imgspot_img

More like this
Related

ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து,...

ஈரானுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க துணை ஜனாதிபதி

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸிடமிருந்து தெஹ்ரான் ஒரு கடிதத்தைப் பெற்றுள்ளது,...

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்