‘துணிந்தால் வெற்றி நமதே’: அஜித்தின் துணிவு பட ‘கேங்க்ஸ்டா’ பாடல்

Date:

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடலான ”கேங்ஸ்டா” வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9ஆம் திகதி வெளியானது. இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்து உலக அளவில் இந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் வன் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், மூன்று தினங்கள் முன் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியானது. இதற்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதனிடையே, இப்படத்தின் ”கேங்ஸ்டா” என்னும் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் ஷபீர் சுல்தானுடன் இணைந்து அவரே ‘கேங்க்ஸ்டா’ பாடலையும் பாடியுள்ளார்.

ஷபீர் சுல்தான், விவேகா இணைந்து பாடலை எழுதியுள்ளனர்.

‘நம்பிக்கை இழக்காமல் போர் தொடுப்பவன்; கடைசி நிமிடம் வரை கர்ம கொடுப்பவன்’, ‘துணிந்தால் வெற்றி நமதே’ வரிகள் கவனம் பெறுகின்றன.

பாடலில் 1.40 நிமிடங்களில் வரும் இசை கூஸ்பம்ஸ் தருணங்களுக்கு உத்தரவாதம். 3.31 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடல் ராப் கலந்து ஈர்க்கும் வரிகளுடன் இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

உள்ளாடைக்குள் ஹெரோயின் கடத்திய பாத்திமாவுக்கு ஆயுள் தண்டனை

4.90 கிராம் ஹெரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத்...

பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

'கனேமுல்ல சஞ்சீவ'வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 'கேஹெல்பத்தர பத்N'...

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்