பத்மே, செவ்வந்தியை அரச பகுப்பாய்வாளரிடம் முற்படுத்த நடவடிக்கை

Date:

‘கனேமுல்ல சஞ்சீவ’வின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ‘கேஹெல்பத்தர பத்N’ மற்றும் இஷாரா செவ்வந்தி ஆகியோரை அரச பகுப்பாய்வாளரிடம் உட்படுத்துவதற்கான அனுமதியை கொழும்பு குற்றப்பிரிவு  நேற்று (2ஆம் திகதி) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமாவிடம் கோரியது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இவ்விரு சந்தேக நபர்களுக்கும் இடையிலான உரையாடல்கள் அடங்கிய குறுந்தகடு (CD) ஏற்கனவே அரச பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவுகளில் கேட்கப்படும் குரல்களை உறுதிப்படுத்துவதற்காக, 15வது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி மற்றும் 18வது சந்தேக நபரான கேஹெல்பத்தர பத்மே ஆகியோரை அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்ப வேண்டியது அவசியம் என்று நீதிமன்றத்திடம் தெரிவித்த CCD, அதற்கான அனுமதியையும் கோரியது.

மேலும், கேஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசி மீதான தடயவியல் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதில் குற்றச் செயல் திட்டமிடல் மற்றும் அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானார்; மற்ற சந்தேக நபர்கள் ‘ஜூம்’ (Zoom) தொழில்நுட்பம் வாயிலாக ஆஜராகினர். சந்தேக நபர்கள் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

குழந்தைகள் வாழும் இடத்தில் மதுபானசாலையா?” – புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில்...

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்