முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சாலேயைப் பரிசோதித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த 10 மருத்துவர்களுக்கு, ஒக்டோபர் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த மனுவை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பு நீதவான் பாசன் அமரசேன இந்த அழைப்பாணைகளை வெளியிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சாலே, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.




