26 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் மகேந்திரா நிறுவனத்தின் புதிய கார்கள் விற்கிறோம்

மகேந்திரா நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் மாத்தறையிலுள்ள பிரதேசமொன்றில் தொழிற்சாலையை நிறுவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தி வருகிறோமென ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் சி.சரவணன் தெரிவித்தார்.

கேயுவி (KUV 100 Nxt) காரே இந்த தொழிற்சாலை ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு முதல் மகேந்திரா வாகனத்தை இலங்கையில் விநியோகம் செய்து வருகிறோம். இது வரையில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான பல தரப்பட்ட வாகனங்களை விநியோகித்துள்ளோம்.

மகேந்திரா நிறுவனம் இந்தியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த வாகனம் சாதாரண விலையில் நடுத்தர குடும்பத்தாரும் கொள்வனவு செய்ய கூடிய நிலையில் தான் அறிமுகப்படுத்தினோம். அப்போது 30 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவே. பொருளாதார நிலைமை டொலர் அதிகரிப்பால் விலை மேலும் உயர்வடைந்தது.
வரிவிலக்களிப்பு வாகன அனுமதிப் பத்திரங்கள் உடையவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வாகனத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்குமென கிளைப் பொறுப்பதிகாரி ஐடியல் மோட்டார்ஸ் இன் யாழ்ப்பாணக் கிளைப் பொறுப்பதிகாரி சி.சகிலன் தெரிவித்தார்.

மூன்று வருடம் ஒரு இலட்சம் கிலோ மீற்றருக்கு உத்தரவாதம் உண்டு. இந்த வாகனத்துக்கு யாழ்ப்பாணத்தில் உதிரிப்பாகங்கள் காட்சியறைகள் திருத்தகங்கள் உண்டு. இலங்கையில் 2000 வரையும் யாழில் 100 வரையும் வாகனங்களை இதுவரை விற்பனை செய்துள்ளோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பணிப்பகிஷ்கரிப்பில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

east tamil

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

Leave a Comment