குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை தளர்த்தி, ஐந்து நாட்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க இன்று (15) அனுமதியளித்துள்ளார்.
டயானா கமகே சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன, தனது வாடிக்கையாளருக்கு சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், ஐந்து நாட்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை தளர்த்துமாறு கோரியிருந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, டயானா கமகேவின் வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையிலும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கும் நீக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.