ஒரு மாதத்தில் ஒருவரின் வாழ்க்கைச் செலவு ரூ.13,810

Date:

இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.13,810 தேவை என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்திற்கான மதிப்பீடே இது.

புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்தின் , செப்டம்பர் மாத மதிப்பீட்டில் ஒரு தனிநபருக்கு ரூ.13,772 தேவை என கணக்கிடப்பட்டிருந்தது.

ஒக்டோபர் மாத மதிப்பீட்டின் படி,  கொழும்பில் வசிக்கும் ஒரு நபருக்கு அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.14,894 தேவைப்படும். மொனராகலையில் வசிக்கும் ஒருவருக்கு அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்திற்குள் செலுத்த ரூ.13,204 தேவைப்படும்.

அதன்படி, தற்போது இலங்கையில் மொனராகலை குறைந்த வாழ்க்கைச் செலவுள்ள மாவட்டமாகக் கருதப்படும் அதேவேளை கொழும்பு வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கையில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு சராசரியாக மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ரூபா 55,240 தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்