அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, சட்டமா அதிபரின் கருத்தை நீதிமன்றம் பெறும் வரை கொழும்பு மேலதிக நீதவான் தரங்க நில்மினி மஹவத்த அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.




