கிளிநொச்சி வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டவை

Date:

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் வீடு ஒன்றில், கிளிநொச்சி 57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 வது சிங்க படைப்பிரிவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து நேற்று சோதனையிட்ட போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத் தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேகத்திற்கிடமான வீடு சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது இடியன் துவக்கு 3, கட்டு துவக்கு 11, இடியன் துவக்கின் மரப்புடிகள் 5, ரீ 56 ரவைகள் 250 உட்பட, 8 கிலோ பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகத்தினடிப்படையில் 31வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கெலனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை...

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து...

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்