இனப்பிரச்சனை மத்தியஸ்தத்திற்கு இந்தியா, அமெரிக்கா வேண்டாம்: இனப்பிரச்சனை தீர்விற்கு யாழில் ‘சாத்திரிகளை’யும் உள்ளடக்கிய குழு!

Date:

தமிழ் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அது பற்றிய கலந்துரையாடல் என யாழில் நேற்று ஒரு கலந்துரையாடல் நடந்தது.

யாழ்ப்பாணம், ராஜா மண்டபத்தில் நேற்றிரவு நடந்த இந்த கலந்துரையாடலை, மன்னாரை சேர்ந்த அமைப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலிற்கு முன்னதாகவே, இது அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் என்ற அப்பிராயம் அனேகமாக கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஏற்பட்டிருந்தது.

இதனால்லோ என்னவோ, நேற்று முக்கிய பிரமுகர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. ரெலோ, தமிழ் தேசிய கட்சி என்பன கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள் கூட்டணி, புளொட் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன், க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தவகையான கூட்டங்களால் என்ன நன்மை? முடிவெடுக்கும் அரசியல் மட்டங்களில் செல்வாக்கு செலுத்த முடியுமா என ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது, இனப்பிரச்சனை தீர்விற்காகன மத்தியஸ்தத்தில் இந்தியா, அமெரிக்கா போன்றவற்றை அழைக்கக்கூடாது, அவற்றிற்கு இலங்கை விவகாரத்தில் நலன்கள் உள்ளன, இலங்கை விவகாரத்தில் நலன்கள் இல்லாத நாடொன்றை 3ஆம் தரப்பிற்கு மத்தியஸ்தத்திற்கு அழைக்க வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதனை சுரேஸ் பிரேமச்சந்திரன் கடுமையாக ஆட்சேபித்தார். இந்த விதமான கருத்துக்களை இங்கு முன்வைக்க வேண்டாமென்றார்.

இந்த சந்திப்பில் ஒரு குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அரசியல் பிரதிநிதிகள், மற்றும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் தரப்பை உள்ளடக்கியதாக அந்த குழு அமைப்பதென்றும், அதற்கான வரைபை தயாரிக்கும் பொறுப்பு செல்வின் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ் சூழலில் அரசியல் ஆய்வாளர்கள் என தம்மை தாமே அழைத்துக் கொள்பவர்களை “அரசியல் சாத்திரியார்கள்“ என அழைப்பதுமுண்டு. இந்த வகையில் யாழில் இயங்கும் குழுவொன்று, முக்கியமான அரசியல் தருணங்களில் திடீரென விழித்தெழுந்து, தமது கருத்துக்களை கேட்டுவிட்டு நடக்க வேண்டுமென கூட்டங்களை ஏற்பாடு செய்வது வழக்கம்.

ஜனாதிபதி தெரிவின்போது, இந்த தரப்புக்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணையவழி கலந்துரையாடலிற்கு அழைத்திருந்தன. அதில் சிறிதரன் எம்.பி மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.

இந்த வகையில் நேற்றும் ஒரு கூட்டம் நடந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்