வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் 100 மி.மி வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம்.
டிசம்பர் 08, 2022 வியாழன் மாலை 05.00 மணியுடன் முடிவடையும் அடுத்த 12 மணிநேரத்திற்கு வானிலை ஆலோசனை நடைமுறையில் இருக்கும்.






