அமெரிக்க உளவுத்துறை இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன், ரஷ்யாவிற்கு விசுவாசமாக சத்தியம் செய்து ரஷ்ய பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளார் என்று TASS செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
“ஆம், அவர் பாஸ்போர்ட் பெற்றார், அவர் சத்தியப்பிரமாணம் செய்தார்,” என்று ஸ்னோவ்டனின் சட்டத்தரணிஅனடோலி குச்செரெனா, TASS இடம் கூறினார்.
39 வயதான ஸ்னோடன், அறிக்கை குறித்து கருத்து கேட்கும் செய்திக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் செப்டம்பர் மாதம் ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கினார்ஃ
அவர் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் விரிவான ஒட்டுக்கேட்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்திய இரகசிய கோப்புகளை கசியவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1