ஐரோப்பிலுள்ள உக்ரைன் தூதரங்களிற்கு அனுப்பப்படும் கடித வெடிகுண்டுகள்… விலங்குகளின் கண்களுடன் இரத்தம் தோய்ந்த பொதிகள்!

Date:

ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளிலுள்ள உக்ரைனிய தூதரகங்களிற்கு விலங்குகளின் கண்களைக் கொண்ட பொதிகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள உக்ரைனிய தூதரகங்கள் சமீபத்தில் விலங்குகளின் கண்கள் அடங்கிய பொதிகளைப் பெற்றுள்ளதாக உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா, செக் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள உக்ரைனிய தூதரகங்கள்  “இரத்தம் தோய்ந்த பார்சல்கள்” பெறப்பட்டன என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஓலே நிகோலென்கோ பேஸ்புக்கில் எழுதினார்.

“இந்தச் செய்தியின் அர்த்தத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.

புதன்கிழமையன்று மாட்ரிட்டில் உள்ள உக்ரேனிய தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட கடித வெடிகுண்டினால் ஒரு ஊழியர் காயப்பட்டார்.

ஸ்பெயினில் 6 இடங்களிற்கு கடித வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டிருந்தன.

முன்னணி ஸ்பானிய அரசியல்வாதிகள், உக்ரைன் மற்றும் அமெரிக்க தூதரகங்கள், டோரேஜோன் டி அர்டோஸ் விமான தளத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய செயற்கைக்கோள் மையம் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஸ்பானிஷ் ஆயுத உற்பத்தியாளர் ஆகியோருக்கு கடித குண்டுகள் அனுப்பப்பட்டன.

இதையடுத்து, ஸ்பெயினின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லஸ்கா, தனது நாட்டில் உள்ள இலக்குகளுக்கு அனுப்பப்படும் கடித குண்டுகளின் தொடர் உக்ரைனில் ரஷ்யாவின் போருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

கிராண்டே-மார்லாஸ்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் அனுப்பிய செய்தியில், கடித குண்டுகள் “ரஷ்ய உக்ரைன் படையெடுப்புடன் இணைக்கப்படலாம்” என்று எழுதியதாக யூரோபா பிரஸ் செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமைச்சகம் அறிக்கையை உறுதிப்படுத்தியது.

இதேவேளை, செக் குடியரசின் ப்ர்னோ நகரில் உள்ள உக்ரைன் துணைத் தூதரகத்திற்கு சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வந்ததையடுத்து செக் போலீசார் வெள்ளிக்கிழமை ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

எக்ஸ்ரே இயந்திரம் மூலம் பரிசோதிக்கப்படும் இந்த பார்சல் ஸ்பெயினில் அனுப்பப்பட்ட கடித வெடிகுண்டுகளை ஒத்திருப்பதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஸ்பெயினில் அனுப்பப்பட்ட வெடிமருந்து சாதனங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்டவை மற்றும் சிறிய அளவிலான வெடிபொருட்கள் மற்றும் சிறிய உலோக பந்துகளை மட்டுமே கொண்டிருந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

பார்சல்கள் திறக்கப்பட்டவுடன் வெடிக்கவில்லை, மாறாக ஒரு ஃபிளாஷ் தீயை உருவாக்கியுள்ளது.

கடித வெடிகுண்டுகளுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அதிகாரிகள் சாத்தியமான சந்தேக நபர்கள் பற்றிய தகவலை வெளியிடவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...

வீதியை தடைசெய்த எல்லையை அகற்றுமாறு தையிட்டி விகாரைக்கு அறிவித்தல்

தையிட்டி பவானி வீதியினை தடைசெய்து இடப்பட்டுள்ள எல்லையை எதிர்வரும் மே மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்