தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்திற்கு விசேட ஆணையாளர் நியமனம்!

Date:

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் விசேட ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் கலாநிதி D.சந்திரசேகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை பதவி நிலையில் இருந்த பேராயர் டானியல் தியாகராஜா ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய பேராயர் நியமிக்கப்படும் வரை இவர் விசேட ஆணையாளராக செயற்படுவார்.

இதற்கான நியமனக்கடிதம் இன்று பிரதம பேராயர் கலாநிதி A தர்மராஜ் ரசாலம் அவர்களால் வழக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபையானது 24 ஆதீனங்களைக் கொண்டதுடன், இந்தியாவை தலைமையாகக் கொண்டுள்ளது. அவ் ஆதீனங்களில் ஒன்று இலங்கையில் யாழ்ப்பாண ஆதீனமாக உள்ளது.

2006ம் ஆண்டு புதிய பேராயராக நியமனம் பெற்ற டானியல் தியாகராஜா தனது 67வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

பேராயர்கள் 67 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் அவர் ஓய்வினை பெற்றார். இந்த நிலையில் ஆதீனத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதம பேராயரின் விசேட ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் புதிய பேராயருக்கான தேர்வில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி முதல்வரும், ஆதீனத்தில் செயலாளருமான அருட் கலாநிதி D S சொலமன் மற்றும் அருட்கலாநிதி V பத்மதயாளன் ஆகியோர் தெரிவு பட்டியலிற்கு தெரிவாகினர்.

அவர்களிக்கான நேர்முக தெரிவு மற்றும் நியமனத்திற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் புதிய பேராயர் நியமிக்கப்படும் வரை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதம பேராயரின் ஆணையாளராக திருச்சி – தஞ்சாவூர் ஆதீனத்தின் பேராயர் கலாநிதி D.சந்திரசேகரன் கடமையில் ஈடுபடுவார்.

நத்தார் பண்டிகைக்கு முன்பதாக புதிய பேராயர் நியமிக்கப்படுவார் என நம்பப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்