நெல்லியடி பொலிசாரால் 4 பிடியாணைகளுள்ள பிரபல திருடன் ஒருவர் கைதாகினார். இதன் போது, புதிய திருட்டுச் சம்பவம் ஒன்றும் வெளிச்சத்திற்கு வந்தது.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய 24 வயதான இளைஞன் ஒருவரே கைதாகினார். அவருக்கு 4 நீதிமன்ற பிடியாணைகள் உள்ளன.
கைதான போது, அவரிடமிருந்து 2 பவுண் தங்கச்சங்கிலியொன்றும் மீட்கப்பட்டது.
சில தினங்களின் முன்னர் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண்ணிடம் அந்த சங்கிலியை அறுத்ததாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றொரு திருடனுடன் இணைந்து சங்கிலி அறுத்ததாகவும், விற்பதற்காக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.




