கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் நடந்தது என்ன?

Date:

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் ஆயுதக் களஞ்சியத்திற்குள் புகுந்து ஆயுதங்களை எடுக்க முற்பட்டதை அடுத்து அங்கு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு தண்ணீர் வாளி தொடர்பாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டை மீறியது, பின்னர் அது பெரும் குழப்பமாக மாறியது.

புனர்வாழ்வு முகாமில் உள்ள இராணுவ பீரங்கி படையணியின் ஆயுதக் களஞ்சியசாலைக்கு கைதிகள் வந்து ஆயுதங்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். வீரர்கள் உடனடியாக வானத்தை நோக்கி எச்சரிக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர், பின்னர் அனைத்து ஆயுதங்களையும் இராணுவம் எடுத்துச் சென்றது.

கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதுடன், புனர்வாழ்வு முகாமுக்குள் இருந்த களஞ்சியத்தின் கதவுகளை உடைத்து, கோடாரிகள் மற்றும் கத்திகளை எடுத்துக்கொண்டு முகாமுக்குள் இருந்த இரண்டு களஞ்சியங்களுகும் தீ வைத்தனர்.

தாதி மற்றும் இராணுவ சிப்பாய் உட்பட பலர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான சுமார் 150 கைதிகள் மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. சோமாவதிய கந்தகாடு வீதியில் இராணுவத்தினரால் தற்காலிகமாக போடப்பட்டிருந்த வீதித் தடையில் அவர்கள் கைதாகினர்.

அத்துடன், புனர்வாழ்வு முகாமில் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த சுமார் 100 கைதிகள் இராணுவத்தினரின் தலையீட்டில் முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

முகாமில் உள்ள பீரங்கி படைக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தையும் கைதிகள் உடைத்து அங்குள்ள உணவை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர்

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்