35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணையும் கமல்

Date:

35 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 1987ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் ‘நாயகன்’. மும்பை ‘தாதா’ குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட் அடித்தது. இன்றளவும் படம் குறித்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்’திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கான அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல கமலை பொறுத்தவரை அவரது ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்று ரூ.450 கோடி வரை வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், ‘நாயகன்’படத்திற்கு பிறகு கமலும் – மணிரத்னமும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் என்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸூம் தயாரிக்கிறது. படம் 2024ஆம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. கமலின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்