விபத்தில் மனைவி பலி: கணவன் படுகாயம்!

Date:

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில், நேற்றிரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிளும் படி ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மனைவி பலியானார். அவரது கணவன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய உசனார் ஆமினா உம்மா என்பவரே பலியாகியுள்ளார்.

வாழைச்சேனை பகுதியிலுள்ள மகளின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் – மனைவியும், பாலைநகரிலுள்ள தங்களது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பின்பாக வந்த படி ரக வாகனம், மோட்டார் சைக்கிளில் ​மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதன்போது, மனைவி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த கணவர் ஆதம் பாவா உசனார், ​அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

படி ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாய்ந்தமருது வொலிவேரியன் வீதி சீரமைப்பு -துரித நடவடிக்கை மூலம் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பம்

சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்...

தையிட்டி காணி ஆக்கிரமிப்பு மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராகத் தளராது போராடுவோம்!

தையிட்டியில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துப் பிரம்மாண்ட விகாரை...

நிந்தவூரில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பாலர்களுக்கும் மகிழ்ச்சிப் பரிசுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேசத்தில் விசேட தேவைகளைக் கொண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்