சிறுவர் தினத்தில் மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஊக்குவிப்பு

Date:

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, “வுமென்ஸ் கோர்ப்ஸ் – ஸ்ரீலங்கா” (Women’s Corps) அமைப்பு, சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்துடன் இணைந்து “ஸ்மார்ட்போன் உலகில், ஸ்மார்ட்டான சேமிப்பு!” எனும் சிறுவர் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டத்தினை இன்று (01) வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் வாழும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை வளமாக்கவும், சிறுவயதிலேயே சேமிப்பின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்தவும் “உங்கள் உண்டியலில் தொடங்கும் சேமிப்பே, நாளை உங்கள் உயரிய எதிர்காலத்தை நிர்ணயிக்கும்!” என்ற நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் தலைவி றிகாஸா ஷர்பீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களுக்குச் சேமிப்பு உண்டியல்கள் வழங்கப்பட்டன. அத்துடன், மாணவர்களிடையே சிறுவயதிலேயே நிதி சார்ந்த ஒழுக்கத்தை விதைக்கும் பொருட்டு, அவர்களின் கைகளாலேயே சேமிப்பு பழக்கத்தை ஆரம்பித்து வைப்பதற்காகப் பணமும் வழங்கப்பட்டு உண்டியல்களில் இடப்பட்டது.

நிகழ்வின் சிறப்பம்சமாகச் சிறுவர் தின இனிப்புகள் மற்றும் கேக் வெட்டப்பட்டு மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன், எம்.எஸ். காரியப்பர் பாலர் பாடசாலையின் மேம்பாட்டிற்காக வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பினால் நிதி உதவியும் இதன்போது உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப், ஆசிரியைகளான ஏ.எம். அஸ்மினா, எம்.எம். பர்வீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.ஐ.எப். நஹ்லா, வுமென்ஸ் கோர்ப்ஸ் அமைப்பின் செயலாளர் எஸ்.எம். முபீதா உட்படப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்த ஆண் ஒருவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 2007 ம் ஆண்டு பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியை...

இறக்காமம் விவசாய அமைப்பிற்கு ரூ.30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கல்

அம்பாறை மாவட்டம், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு...

சமுர்த்தி தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம்: கிழக்கு மாகாண விழிப்புணர்வு மாநாடு நிறைவு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலயத்தின் ஏற்பாட்டில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்