தலவாக்கலை இளைஞன் படுகொலை!

Date:

தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச வீடொன்றுக்கு வந்த, தலவாக்கலையைச் சேர்ந்த 24 வயதான லெட்சுமணன் ராஜேந்திரன் இனம்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் (4) இரவு அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலஹா- கிரேட்வெளி பிரதேசத்திலுள்ள தனது ம​னைவியின் வீட்டில் தங்கியிருந்து கூலித் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒரு பிள்ளையின் தந்தையான இவர், லிட்டில்வெளி பிரதேசத்தில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு தனது மாமனாருடன் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

எனினும், அந்த வீட்டுக்கு அருகிலிருந்து காயங்களுடன் அவர் மீட்கப்பட்டுள்ளார். பின்னர், தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், உயிரிழந்துவிட்டார்.

சம்பவம் தொடர்பில் கலஹா மற்றும் கம்பளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்