யாழில் தற்கொலைக்கு முயன்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி பலி

Date:

யாழ்ப்பாணம் புங்கங்குளம் புகையிரத கடவையில் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார்.

இச்சம்பவம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இளைஞனை அதே ரயிலில் ஏற்றி மீள திரும்பி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

உயர்ந்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்