:
வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இரண்டு அதி சொகுசு பேருந்துகளில், முன்னால் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு கவிழ்ந்துள்ளது.
இதன்போது பேருந்து சாரதி மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளனர்.
இதேவேளை குறித்த பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குள்ளான பேருந்தின் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றைய அதிசொகுசு பேருந்து சாரதி துரிதமாக செயற்பட்டு, தனது பேருந்தை வீதியின் மற்றைய பக்கத்திற்கு செலுத்தி விபத்தை தவிர்த்திருந்தார்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




