போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பாடசாலைகளில் விசேட நடவடிக்கை

Date:

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள்,நிகழ்ச்சிகள் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பல பாடசாலைகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதாரத் துறையினரும் ,கல்வி துறையினரும் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பாடசாலை சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் சிகிச்சைகளை நாடிவரும் ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...

இனி நான் மஹிந்த அணியில் இல்லை… அநுரவிற்கே ஆதரவு: அந்தர் பல்டியடித்த சுமணரத்ன தேரர்!

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட பயணத்தின் போது நடைபெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்