8 ஆண்கள் மூலம் 11 பிள்ளைகள்; இன்னும் ஆசை அடங்கவில்லையாம்; 3 கழிந்தால் 5 மிச்சம்: ரிக்ரொக் அழகியின் வில்லங்க தத்துவம்!

Date:

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணிற்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு வித்தியாசமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் டென்னசியை சேர்ந்தவர் மெம்பிஸ் மமா. டிக்ரொக்கில் Phi என அறியப்படுகிறார். இவர் 8 வெவ்வேறு ஆண்கள் மூலம் 11 குழந்தைகளை பெற்றுள்ளார்.

தற்போது, சமூக ஊடக பிரபலமாக உருவெடுத்து வரும் இவர், தனது குடும்பம் பற்றி பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“இதெல்லாம் ஒரு பிழைப்பு“ என்ற வகை விமர்சனங்களை பலரும் வெளியிட, இதைப்பார்த்து அந்த பெண் கடுப்பாகி விட்டார்.

அவர் அதற்கு ஒரு கன்னாபின்னா தத்துவ விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பிஹாய் கூறுகையில், 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை, நான் ஏன் வெட்கப்பட வேண்டும். இது எனக்கு நன்மை தான். எப்படியென்று தானே கேட்கிறீர்கள்,

அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் இப்போது ஒன்றுமில்லை, சீரோ மட்டுமே இருக்கும். ஆனால் உங்களிடம் எட்டு இருந்தால் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் ஐந்து உள்ளது. இன்னும் புரியவில்லையா? அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள். ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும் ஐந்து பேர் இருப்பார்கள் என கூறியுள்ளார்.

அவரின் இந்த விளக்கத்தை கேட்டு பலரும் தலைசுற்றிப் போயுள்ளனர். இன்னும் சிலர் காறித்துப்பாத குறையாக விமர்சித்து வருகிறார்கள்.

அத்துடன், இந்தளவு குழந்தைகளும், தந்தைகளும் போதாதாம். இன்னும் பல தந்தையர் மூலம், பல குழந்தைகளை பெற்றெடுப்பதே எதிர்கால இலட்சம் என்றும் தெரிவித்துள்ளார்.

எதுஎப்படியோ, அம்மணியின் சமூக ஊடகப்பக்கத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதற்குத்தானே இத்தனை அளப்பறையும்!

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்