ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ள உள்ளார்.
ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, ஜூலை 8 ஆம் திகதி, தனது 67 வயதில், தனது அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இதேவேளை, உத்தேச நன்கொடையாளர் மாநாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நிலவும் நெருக்கடியை சமாளிக்க இலங்கை சார்பில் மாநாட்டை நடத்த ஜப்பான் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானுக்கான விஜயம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸுக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிலாவுக்கான தனது விஜயத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் ரொமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியரைச் சந்திக்க உள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் 55ஆவது வருடாந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்கவுள்ளார்.
இந்தக் கூட்டம் செப்டம்பர் 30-ஆம் திகதி வரை நடைபெறும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் தலைவராகவும் உள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.