டலஸ் அணியின் 3 பேர் எம்மிடம் வந்து விட்டனர்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை, மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை எம்.பி.க்கள் குழுவிற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக காரியவசம் தெரிவித்துள்ளார்.

மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அவர்களுடன் இணைந்துள்ளதாகவும் மற்றவர்கள் தற்போது அவர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் காரியவசம் கூறினார்.

நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுமா என வினவியபோது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதால், நாமல் ராஜபக்ச ஏற்கெனவே அமைச்சுப் பதவிகளை மறுத்துள்ளதாக காரியவசம் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்