ஆசிய சம்பியன்கள் இலங்கையை வந்தடைந்தனர்!

Date:

ஞாயிற்றுக்கிழமை ஆசியாவின் சம்பியன்களாக முடிசூட்டப்பட்ட தேசிய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து இரண்டு திறந்த  டபுள் டெக்கர் பேருந்துகளில், வாகன பேரணியாக அணிவகுத்துச் செல்வார்கள்.

இந்த வாகன அணிவகுப்பு கொழும்பு – நீர்கொழும்பு வீதி வழியாக இலங்கை கிரிக்கெட் (SLC) தலைமை அலுவலகம், மைட்லாண்ட் பிளேஸ், கொழும்பு 07 மற்றும் கொழும்பு 07 டொரிங்டன் சதுக்கம், விளையாட்டு அமைச்சின் வளாகத்திலுள்ள வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை சென்றடையும்.

இந்த வாகன பேரணி சுமார் காலை 9 மணிக்கு கொழும்பை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், வீதியோரங்களில் வரிசையில் நின்று ஆசியாவின் ராஜாக்கள் மற்றும் ராணிகளுக்கு தேசியக் கொடியை அசைத்து உற்சாகப்படுத்துவதன் மூலம் அணிகளுக்கு தங்கள் ஆதரவையும் பாராட்டையும் காட்ட ரசிகர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தேசிய கிரிக்கெட் அணி ஆறாவது ஆசிய பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.

வலைப்பந்தாட்ட அணி சிங்கப்பூரில் சிங்கப்பூரை 63 – 53 என்ற கணக்கில் வீழ்த்தி ஆறாவது ஆசிய பட்டத்தை வென்றது.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்