ரயில் இருக்கை முன்பதிவு காலத்தை 14 நாட்களில் இருந்து 30 நாட்களாக ரயில்வே திணைக்களம் நீட்டித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் பயணிகள் ரயில் இருக்கைகளை 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய முடியும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பயணிகளுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.




