ஏ9 வீதியில் பச்சை மஞ்சள் கொண்டு சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைகளின் பின் ஈரப்பெரியகுளம் பொலிசாரால் விடுவிப்பு

Date:

ஏ9 வீதியில் மஞ்சள் கொண்டு சென்ற வாகனம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு 2 மணிநேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, ஏ9 வீதியில் கூலர் ரக வாகனத்தில் மஞ்சள் கொண்டு செல்லப்படுவதாக ஈரப்பெரியகுளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த பொலிசார் பெருந்தொகை பச்சை மஞ்சளினை மீட்டதுடன், அதனை கொண்டு சென்ற இருவரையும் தடுத்து வைத்து விசாரித்தனர்.

இதன்போது குறித்த பச்சை மஞ்ள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவில்லை என்பது பொலிசாருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வாகனத்துடன் மஞ்சள் விடுவிக்கப்பட்டதுடன், தடுத்து வைத்த இருவரையும் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்