ஆசிய கிண்ணம்: ஒரு வாரத்தில் மாறிய கதை; ஆப்கானை பழிதீர்த்தது இலங்கை!

Date:

ஆசிய கிண்ண தொடரில் கடந்த சனிக்கிழமை நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 105 ரன்களுக்கு ஓல் அவுட் ஆனது. ஏழு நாட்களுக்குப் பிறகு, அதே அணி, சகலதுறைகளிலும் மிளிர்ந்து, ஆப்கானை வீழ்த்தி பழி தீர்த்துள்ளது.

இம்முறை சார்ஜாவில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 176 என்ற வலுவான இலக்கை விரட்டியடித்து பல சாதனைகளை படைத்தது.

சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.

ஆசிய கிண்ண தொடரின் லீக் சுற்றில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றிற்கு முன்னேறியுள்ளன. அந்த அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியன தமக்குள் ஒவ்வொரு முறை மோதி, முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.

நேற்று ஆரம்பித்த சூப்பர் 4 சுற்று போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.

ஆப்கானிஸ்தானின் ஆரம்பம் அமர்களமாக இருந்தது. தொடக்க வீரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ஓட்டங்களில் வீழ்ந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ரஹமதுல்லா குர்பாஸ் வெளுத்துக்கட்டினார். 45 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் குவித்தார். இப்ராஹிம் சட்ரன் 40 ஓட்டங்கள் பெற்றார்.

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்களை கடக்கும் என்ற நிலை காணப்பட்ட போதும், இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆப்கான் வீரர்கள கட்டுப்படுத்தினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

இலக்கை விரட்டிய இலங்கை தரப்பில் பதும் நிசங்க, குசல் மென்டிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் 62 ஓட்டங்களை தமக்குள் பகிர்ந்து கொண்டனர். நிசங்க 35, மென்டிஸ் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அசலங்க, சானக்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த குணதிலக, பானுக ராஜபக்‌ஷ அதிரடியாக ஆடினர். குணதிலக 20 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 33 ஓட்டங்களும், பானுக 14 பந்துகளில் 1 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களையும் குவித்தார்.

இலங்கை 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.

ஆப்கான் அணியின் முஜிபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் ரஹமதுல்லா குர்பாஸ்.

ஆப்கானிஸ்தான் அணி ரி20 போட்டிகளில் 170 ஓட்டங்களிற்கும் அதிகமாக பெற்றும் தோல்வியடைந்த முதலாவது போட்டி இது.

ஷார்ஜா மைதானத்தில் ரி 20 போட்டிகளில் விரட்டியடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்