திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை கழுத்தறுத்து கொன்ற 2 பிள்ளைகளின் தந்தை!

Date:

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் ரயகடா மாவட்டம் ஒசபடா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரசிக பிரதான். இவரும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரீமா மஜ்ஹி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தன்னை காதலிக்கும்படி ரீமாவை வற்புறுத்தி வந்தார். மேலும், ரீமாவின் பெற்றோரிடம் சென்று திருமணம் செய்துவைக்கும்படி கோரியுள்ளார்.

ஆனால், பிரதானை காதலிக்க ரீமா மறுத்துவிட்டார். அதேபோல், பிரதானுக்கு ரீமாவின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரதான் ஏற்கெனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளவர்.

ரீமா சிறுமியாக இருந்த போது, அவரை மயக்கி தன்னுடன் பிரதான் அழைத்து சென்றிருந்தார். ரீமாவின் பெற்றோர் அவரை மீட்டெடுத்திருந்தனர். அதன் பின் ரீமா, பிரதானுடனான தொடர்பை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில், ஒசபடா என்ற கிராமத்தில் ரீமா நேற்று கட்டிட வேலைக்கு சென்றிருந்தார். மதிய உணவு வேளையில் தனது நண்பியுடன் உட்கார்ந்திருந்த போது,  அங்கு வந்த பிரதான் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும்படியும் ரீமாவை வற்புத்தியுள்ளார். இதற்கு ரீமா எதிர்ப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரதான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ரீமாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் ரீமா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தாக்குதலை தடுக்க வந்த ரீமாவின் நண்பியையும் பிரதான் தாக்கியுள்ளார்.

பின்னர், தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரீமா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும், பிரதான் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மழையோ அல்லது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்